பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


நெய் கமழ்க்கும். தின்றால் அந்த உணவும் கசக்கும்; வேம்பாக சுவைக்கும். ‘வந்தால் போதும்’ என்று வருகைக்கு மகிழ்ந்து ஆதனம் தந்து அமர வைத்து ஊறுகாயும் இல்லாத பழஞ்சோறு உண்ணத் தந்தால் அஃது அமிழ்தம் ஆகும். தேவரும் இந்த உணவைத் தேடி மண் உலகில் அடி எடுத்து வருவர். அன்பு என்பையும் குளிரச் செய்துவிடுகிறது.


22. நீரைப் பிரித்து அறிக
(நட்பு ஆராய்தல்)

கரும்பைக் கடித்துத் தின்ன நீ பாடம் படித்திருக்கிறாயா? நுனிக்கரும்பு அது தொடக்கம்; இனிப்பு அதன் ஆரம்பம்; மெல்ல மெல்லக் கடித்து அடிக் கரும்புக்கு வா; தொடக்கத்தில் சுவை அதற்கு அமையாது; மெல்ல மெல்ல அது சுவைக் கட்டி, சாறு சுவைக்கும். உயர்ந்தவர் நட்பு பழகப் பழக இனிக்கும். தீயவர்பால் நட்பு செல்லச் செல்லப் புளிக்கும். அடிக்கரும்பு ஆரம்பம்; நுனிக்கரும்பு முடிவு சென்று தேய்ந்து குறையும்.

ஆள் அடி உயரம் அவன் செல்வத்தின் அளவு. இவற்றைக் கொண்டு அமையாது நட்பின் ஆழம். பண்புமிக்கவரின் பழம்பெருமை குடிப்பிறப்பு. இதனை நீ அறிந்து கொள்வது முதற்படிப்பு. அவர்கள் நடுநிலைமை பிறழாத பீடும் பெருமையும் கொண்டவர். அத்தகையவரோடு நீ கொள்வது நட்பின் நன் முடிப்பு.