பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

107



பருத்துக் கொழுத்த யானை அது பாகனையே கழுத்தை முறித்துக் கொல்லும். உருவுகொண்டு அவனிடம் நட்பு மருவினால் அது யானையின் உறவாக முறியும். நாய்; அலைந்து திரிவதுதான்; குலைத்துக் குலைத்துக் குமைவதுதான். அது நன்றி. கெடாது; நாயகனைக் கடிக்கத் தொடாது. நாயனைய நயத்தவரை நீ நட்பாகக் கொள்க; அது ஒட்பமாக அமையும்.

பக்கத்து வீட்டுக்காரன்; ஆனால் அவன் துக்கத்துக்குத் துணையாகமாட்டான்; எக்களித்து மகிழ்வான்; அவன் நட்பு நயக்காதே. இடத்தால் அகன்று எங்கோ வாழ்ந்தாலும் உள்ளத்தில் உண்மை உறவு கொண்டவர் பள்ளத்தில் விழும்போது படுதா இட்டுக் கொண்டு மறைந்து வாழார். கண்ணன் காரிகைக்குத் தரும் அபயமாக உபயம் செய்ய வருவர்.

கோட்டுப் பூச் சூடிக் கொள்ள அதனைக் கேட்டுப்பெற விழைவர்; மலர்ந்தால் அது கருகாது; கயத்து நீர்ப்பூ நீரை விட்டு எடுத்தாலே கள் நீர் (கண்ணீர்) விடும்; கலுழும்; கசங்கிவிடும். மலர்களுள் இத்தனை வேறு பாடா? மாந்தர் தம்முள் இந்த வேறுபாடு இருக்கும்போது மலர்கள் மட்டும் மங்கியா கிடக்கும். ஒருமுறை பழகிவிட்டால் நீங்காத நட்பு மேலோரிடம் உள்ளது. பலமுறையும் பழகியும் கசங்கி கசந்து கலுழ வைப்பர் கீழோர். அவர்கள் நட்பு. கயத்து மலர் ஆகும்.

பாக்கு மரம்; வீட்டுக்கு அழகு தருகிறது; காய்க்கிறது; பயனும் தருகிறது; ஆனால் அதை வளர்ப்பது அருமை; நீரும் சேறும் நிதமும் அமைத்தால் தான் அது பாக்கு மரம். இல்லையென்றால் அது வெறும்