பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



23. ஒருவர் பொறை இருவர் நட்பு
(நட்பிற் பிழை பொறுத்தல்)

உமி உண்டு என்பதால் நெல்லை நெகிழ்ப்பார் இல்லை; நுரை உண்டு என்பதற்காக நீரைக் குறை கூறி ஒதுக்கமாட்டார்கள். புல்லிதழ் அதன் புறத்தைச் சுற்றிக் கொண்டு அதன் நிறத்தைக் கெடுக்கிறது என்பதால் நறுமலரை வீசி எறியமாட்டார்கள்; அவைபோல நண்பனின் பழமை பாராட்டி அவன் கிழமையில் எந்தக் குறையும் காணாதே.

கரையை உடைத்துக் கொண்டு நீர் வயலில் பாய்கிறது; கரையை உடைத்துவிட்டது என்பதால் அதன் மீது சினம் கொண்டு அதனை கண்டபடி ஓடவிட்டால் அஃது பயிரை அழிக்கும். வயலுக்கு நீர் தருவார் யார்? நீரோடு நீர் ஊடல் கொண்டால் பயிர் வாடல்தான் மிச்சம். நீரைக் கட்டுப்படுத்தி அதனை மீண்டும் பாய விடுக! பழகிவிட்ட நண்பர் உரிமை பற்றித் தவறுகள் மிகையாகச் செய்துவிட்டாலும் பகையாகக் கொள்ளாது நகையாகக் கொள்வதுதான் தகையாகும்.

சரிதான்; அளவுக்கு மீறித் தவறு செய்துவிட்டான். யார் அவன்? உன் நண்பன்; பலகாலம் பழகியவன்; அந்தப் பழமையைப் பார்க்க வேண்டாமா? உடனே நீ சீறிச் சினந்தால் அவன் உன்னை விட்டு விலகி விடுவான். ஒருவர் காட்டும் பொறுமை இருவர் தம்முள் உள்ள