பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

113


சென்றுவிடும். என் செய்வான் பாவம்! நீரை எறித்துக் கரை ஏற்றுகிறான். பெட்டி படுக்கை தட்டு முட்டு ஒட்டை உடைச்சல் இவை தாக்கப்படுகின்றன. அவை காக்கப்படுகின்றன; அந்த வீட்டை விட்டு ஏன் வெளியேற மறுக்கிறான்? அது அவமானம்; பலஹீனம், சுகஈனமும் ஆகிவிடும். நூறு குறையிருந்தாலும் அதைவிட்டு வேறு இடம் பார்ப்பது இல்லை. பொறுத்தே செயலாற்ற வேண்டும். அங்கு வாழவே முடியாது என்றால் அதை விட்டு விலகத்தான் வேண்டும். நட்பும் அப்படித்தான்; பழகியவன் பெருச்சாளி; அடித்து விரட்ட முடியாது. பொறுத்துக் கொண்டு மெல்ல அவனிடம் இருந்து வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்.

சீர்மிக்க நல்லோர் நட்பு கார் காலத்து மழை போன்றது; வாழ்வுக்கு உதவுவது. பேர்கெட்ட தீயோர் நட்பு வற்றிய வறற்காலம் போன்றது.

சுவர்க்கம், நரகம் இவை நாம் தேடிக்கொள்வன; நுண்ணுணர்வு மிக்க கண்ணியவான்களின் தொடர்பு சுவர்க்கம்; அறிவு என்பதன் அகராதி இல்லாத முகராசிகளுடன் தொடர்பு சுவர்க்க நீக்கம்; நரகம், இவை நாம் படைத்துக் கொள்வன.

பந்தமோ பாசமே இல்லாது வந்து சேர்ந்த நட்பினர் தொடர்பு காட்டுத் தீ போலப் பற்றும்; வைக்கோற் போர் போல் வானை முட்டும்; பிறகு நெருப்பு இருந்த இடம் கூடத் தெரியாமல் மறைந்துவிடும். மிக்க ஒளிவிட்ட நட்பு தோன்றிய கணத்தில் மறைந்துவிடுகிறது. இது கூடா நட்பு.

நண்பன் என்று அவனை நாடுகிறாய்; வானத்தை வளைத்துக் கயிறாக ஆக்கித் தருகிறேன் என்கிறான்.

8