பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

121



அவனைப் பார்த்தால் படித்தவன்போல் தெரியவில்லையே என்று ஒருசிலர் பேச ஆரம்பிக்கின்றனர். ஏன் அவையின்கண் அடங்கி இருக்கத் தெரியவில்லை. அவசரப்படுகிறான்; அடித்துப் பேசுகிறான்; அவன் படித்தும் பேதை என்பதைக் காட்டிக் கொள்கிறான்.

தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசன்டன் என்பார். பனை ஒலை சலசலக்கிறது; அதில் பசுமை இல்லை; பச்சையோலை சல சலப்பு செய்வது இல்லை; அது ஈரம் தாங்கி நிற்கிறது; கற்ற அறிவாளிகள் அடக்கம் காட்டுவர்; அருமையாக ஒருசில பேசினாலும் அவை பெருமை காட்டக் கூடியவை; ஆய்வுக் கருத்துகள் மிகச் சிலவாகத்தான் இருக்கும்; அதை உலகம் வியந்து வரவேற்கிறது. நுட்பமாகப் பேசுபவர் மிகுதியாகப் பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள். கத்திப் பேசினால் கற்றவன் என்று மதித்துவிடமாட்டார்கள்.

பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டில் அதில் மாம்பழச்சாறு ஊற்றினால் அந்தப் பன்றிக்கு அதன் அருமை தெரியப்போவது இல்லை. பாறைக் கல்லிலே முளைக்குச்சி அடித்தால் அது பிளவுபடப் போவது இல்லை; செவிடன் காதில் சங்கு ஊதினால் அது மற்றவர்களைத்தான் செவிடாக்கும். அரிய கருத்துகளை அறிந்து பயன்படுத்திக் கொள்வார் முன்பே அவற்றைக் கூற வேண்டும்; பல்லில்லாத கிழவிக்குக் கல்முறுக்குத் தந்தால் அவள் என்ன செய்ய முடியும்? முறுக்கு கல் என்பாள்; கல்வி கடுமை என்பான் கல்லாதவன்.

கரித்துண்டு அதை வெளுத்துக் கட்டுவது என்று ஒருவன் பாலில் கழுவி அதை உலர்த்துகிறான்; அது