பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


உளுத்துப் போகுமே அன்றி நிறம் மாறாது கருப்பு நாயை எவ்வளவுதான் தேய்த்துக் குளிப்பாட்டினாலும் அது வெள்ளை நிறம் பெறாது. முரடன் படிக்க மனம் இல்லாதவன் அடித்து அடித்துப் படிக்க வைத்தாலும் அவன் மண்டையில் ஏறப் போவது இல்லை; இந்த மாட்டு ஜென்மங்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. என் செய்வது?

நறுமலர் பூத்த நந்தவனம்தான்; அங்கே தேனீ கழன்று திரியும்; தேனருந்தும்; பயன்பெறும். கழிசடையில் மேயும் ஈ அதனைப் ‘பூந்தோட்டத்துக்குப் போ’ என்றால் அதற்கு “ஆவல் தனக்கு இல்லை” என்று குப்பைக் கூளம் தேடித்தான் சல்லும்; அது அதன் வாழ்வு முறை. அறிவு தரும் நூல் நிலையம் சென்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்க விரும்பாதவர் பகல் காட்சிக்கு வெய்யிலில் கியூ வரிசையில் நிற்பர். மட்டமான படங்களைப் பார்க்கச் செல்வரே அன்றித் திட்டமிட்ட கல்வியை நாடமாட்டர்கள் சிலர்.

கற்றவர் கூறும் கசடு அற்ற ஞானம் அஃது அவனைக் கவரவில்லை; ஈர்க்கவில்லை; ‘அறுவை’ என்று சொல்லிவிட்டுக் கேளிக்கை விரும்பும் வேடிக்கை மனிதரோடு உல்லாசப் பேச்சுப் பேச அவர்கள் சகவாசத்தை நாடிச் செல்வர். கல்விமேல் நாட்டம் செலுத்தமாட்டார்கள்.