பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



கடற்கரையில் காற்று வாங்கச் செல்கிறான், ஊற்று நீர்தான் அவன் தாகத்தைத் தீர்க்கிறதே தவிரப் பரந்த கடல் பயன்படுவது இல்லை. அஃது உவர்ப்பு: செல்வம் படைத்தவன் கண்ணுக்குத் தெரியலாம்; அவனிடம் சென்று கைநீட்ட இயலாது. இவனைப் போன்ற மாத வருவாயக்காரன்தான் உதவி செய்ய முன்வருவான்.

அதோ அவன்பொருள் சேர்த்துச் சேமித்து வைத்திருக்கிறான்; அவன் ‘எனது’ என்று சொல்லிப் பெருமைப் படுகிறான்; அவன் அதை அனுபவிப்பது இல்லை. நானும் அதை எனது என்று சொல்கிறேன்; நானும் எடுத்து அதனை அனுபவிக்கப் போவது இல்லை. அவனுக்கும் எனக்கும் வேறுபாடே இல்லை.

அடுக்கிய செல்வம் முடக்கி வைத்து அதனைக் காத்துப் பூதம் போல் விழித்துக் கிடக்கிறானே அவனை விட எந்தக் காசும் இல்லாமல், தூசு தட்டத்தேவை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறானே அவன் வாழ்க்கை நிம்மதி, அவன் யாருக்கும் கைக் கட்டிக் கொண்டு பதில் சொல்லத்தேவையில்லை. உழைப்பு இல்லை; அதனால் ஏற்படும் உளைச்சலும் இல்லை. செல்வனும் எதுவும் துய்க்கப் போவது இல்லை; இவனும் எதுவும் கொண்டு மகிழப் போவதில்லை. அவன் பணம் படைத்தவன்; இவன் குணம் படைத்தவன்.

சேர்த்து வைத்தது கோடி ஐந்து; என்றாலும் ஓடி எடுத்து விளையாட முடியாது; சொந்தம் என்று கூறிக் கொள்ளலாமே தவிர அதில் எந்த பந்தமும் காட்ட முடியாது. அசையாத சொத்து, ஐந்து பத்தாகிறது. அவன் செத்து மடிந்தான்; பாகத்தர் வந்து அதனை எடுத்துப்