பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


அவர்களிடம் இருப்பது இல்லை; இதோ தேனி போலச் சுறுசுறுப்பாக வேலை செய்கிறானே அவன் நிலை என்ன? ‘ஒய்வு இல்லை; ஒழிச்சல் இல்லை’ என்கிறான். பொருள் ஈட்டுவதும் துன்பம்; ஈட்டியதைக் காத்து வைப்பதும் துன்பம். பணக்காரானாகப் பிறப்பது பாபமான தொழில். அரசர் குடியில் பிறந்தால் பெருஞ்சுமை என்கிறான் சேரன் செங்குட்டுவன்; “மழை வளம் கரந்தால் வான்பேர் அச்சம்; நாட்டு மக்கள் தவறுசெய்தால் அதைவிட அச்சம்” என்கிறான். பொருள் அதிகாரமே பொறுப்புடைய ஒன்று; அளவாக ஈட்டி அதைச் சேர்த்து வைத்து வளமாக வாழ்வதே அறிவுடைமை; முடிந்தால் பிறர் துன்பத்தையும் போக்குக. இதுவே அறன் எனப்படுவது ஆகும்.


29. இல்லானை இல்லாளும் வேண்டாள்
(இன்மை)

காவி உடை உடுத்தி இந்தப் பாவ உலகினின்று விடுதலை பெற்றவன் ஆயினும் அவனும் நாலு காசு வைத்திருந்தால்தான் நாலு பேர் சுற்றி வருவார்கள். சாதிக்காரர்தான் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கலாம்; என்றாலும் குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே என்பதை மறந்து விட முடியாது.

நீர் அதைவிட நெய் நுண்மையது; அதைவிடப் புகை நுழைய முடியாத இடமே இல்லை என்பர். அந்தப் புகையும் நுழைய முடியாத இடத்தில் வாழ வகை