பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



தோலும் எலும்புமாகத் தோன்றி வறுமையிலே வாடினாலும் நல்லியல்பு இல்லாதவரிடத்துத் தம் குறைபாடு எடுத்து உரைக்கார். உரைத்தாலும் அவர்கள் என்ன குறைக்கவா போகிறார்கள். குறிப்பறிந்து உதவும் நிறைமனம் உடையவரிடத்துத் தம் குறைகளைக் கூறினால் தவறு இல்லை; அவர்கள் தீர்த்து வைப்பர்; நீ உன் நிலையில் தாழத் தேவை இல்லை.

நீண்ட நாள் பழகியவள்; “அவன் வேண்ட உடனே அழைத்துச் சென்று சோறும் நீரும் தந்து அவனை மகிழ்விப்போம்; அவன் மிடிமை தீர்ப்போம். அவனும் நம் வீட்டாரோடு பேசி நலன் விசாரிக்கட்டும்; உள்ளம் கலந்து உறவாடுவோம்” என்று இருக்க வேண்டும். செல்வன் ஒருவனைக் காண்கிறான் பழைய நண்பன் “செல்வோம் உம் வீட்டுக்கு” என்றால் “நில்லாய் முற்றத்தின்கண்” என்று சொல்லித் தன் கைப்பட அவன் தட்டுச் சோறு வைத்து “உண்க” என்பான். நாயினும் கீழாக நடத்தும் முறை இது. உள்ளே அழைத்துச் சென்றால் கள்ளே அனைய காரிகை அவன் மனைவியைக் காமுறுவான் என அஞ்சுகிறான். தன் மனைவி மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை. வீட்டுக்கு அழைக்காமல் வீதியிலே நிறுத்தி நீதிகள் பேசுகிறான். மனித அபிமானம் நேசம் இவை பசையற்றுவிட்டன. கீழ்மகன் அவன்; அத்தகையவனை நாடிச் செல்வது கீழ்மையாகும்.

“ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு அஃது இழிவு ஆகும்” என்று மானத்தோடு வாழ்பவன் என்றும் மதிப்பு இழப்பது இல்லை. கை நீட்டி அவன் பிறரிடம்