பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


குறை கூறினால் அவன் நிறை செய்கிறான். பிறர் துயர் களைகிறான்; இவன்தான் செல்வன்; இந்த நந்நிலம் இவனைப் பெற்றதால் பெருமை பெறுகிறது. நிலம் என்னும் அந்நல்லாள் மகிழ்கிறாள். இவர்கள் தரித்திரர்தாம். எனினும் நற்சரித்திரம் படைக்கின்றனர்.

இல்லாத கொடுமை. அதனால் இந்தச் செல்வனிடம் வந்து நின்று தாம் நிலையில் தாழ்ந்து விட்டதை எடுத்துக் கூறுகிறான்; செல்வன் அவனிடம் பரிவு காட்டுவதுபோல் நடிக்கிறான். “ஐயோ பாவம் நல்லவர்களுக்கே காலம் இல்லை; நீ யாருக்கும் எந்தக் கொடுமையும் செய்தது இல்லை; உனக்கா இந்தத் தாழ்நிலை. உள்ளபோது கேட்டவர்களுக்கு எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தாயே! உனக்கா இந்தத் தாழ்வு? பாவம்! கிழிந்த வேட்டி; குழிந்த வயிறு; மெலிந்த தேகம் இந்தத் தரித்திரம் மிகவும் கொடுமை; வறுமை மிகவும் கொடியது. நெருப்பிலும் தூங்க முடியும்; இந்த வறுமையில் நிம்மதி இழக்க வேண்டியதுதான்” என்று நீலிக் கண்ணிர் வடிக்கிறான். இந்தப் போலிகளை நினைத்தால் நெஞ்சம் குமுறத்தான் செய்கிறது. கொல்லன் உலைக்களத் தீபோலப் பற்றி எரிகிறது. இந்தப் பச்சோந்தி கள் பகல் வேடக்காரர்கள்; இவர்கள் செல்வர்கள்; வெட்கம்; வெட்கம்; வெட்கம்.

அவன் கேட்கிறான்; கொடுக்க முடியவில்லை. அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; பிறரை ஏமாற்றிப் பிழைக்கிறாய்; அஃது உன் தொழிலாகி விட்டது. ஊர் பழிக்கிறது; அதற்கும் அஞ்சவில்லை. எதற்காகவும் வெட்கப்படுவது இல்லை. மொத்தத்தில் தன் குடிப் பெருமை கெடக் கூடிய நிலைக்குத் தாழ்ந்து போவது இழிவாகும். கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து