பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



31. இரவலரின் அவலம்
(இரவச்சம்)

இரத்தல் இழிவுதான்; என்றாலும் அதுவும் தேவையாகிறது. ஆனால் அவர்கள்படும் இன்னல் மன உளைச்சல் அதற்கு இல்லை குறைச்சல்.

ஆணவம் பிடித்தவர்கள் பணத்தை ஆளுபவர்கள்; “இந்தப் பிச்சைக்காரர்கள் நம்மால்தான் பிழைக்கிறார்கள். துப்புக் கெட்டவர்கள்; அதனால் இவர்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். உள்ளவர் கை மடங்கினால் இல்லை என்பார்க்கு இல்லை வாழ்வு நிலை” என்று ஆணவத்தோடு அறை கூவல் விடுப்பவர் உளர். செல்வத் திமிர்; அதனால் அவர்கள் இப்படிச் செருக்கோடு பேசுகிறார்கள். மருண்ட மனம் உடையவர்கள், இவர்களிடம் தெருண்ட மனம் உடையவர் செல்லுதலைத் தவிர்ப்பர். உலகம் பரந்தது; உள்ளவருள் உயர்ந்தவரும் இருப்பர்; அவர்கள் உதவாமல் இரார்.

இரப்பதற்கு அஞ்சி இழிவான செயல்களில் இறங்குவர்; பழிதரும் பாவங்களையும் துணிவர்; உயிர் வாழ்க்கை உயர்ந்ததுதான்; தவிர்க்க இயலாததுதான்! அதற்காக மனிதன் தாழ்ந்தாபோக வேண்டும். சாவு என்ன கசக்கும் எட்டிக் காயா? “உறங்குவது போன்றது இறப்பு: உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு” என்பது வள்ளுவன் வாக்கு; பிறப்பும் இறப்பும் அதிசய