பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

139


விளைவுகள் அல்ல; அவை மனிதனுக்கு ஏற்படுகின்ற சிறு விபத்துக்கள்; அவற்றைத் துக்கி எறியத் துணிவு இருந்தால் இரந்தும் உயிர் வாழத் தேவை இல்லை. மறந்தும் அவர் இழிதொழில்களை ஏற்கத்தேவை இல்லை. மானம் பெரிது; உழைத்து வாழ முடியும்; நம்பிக்கை தேவை. உள்ளம் உறுதியாக இருந்தால் தலை நிமிர்ந்து வாழ முடியும். பிச்சை எடுக்கத் தேவை இல்லை.

இரக்கின்ற இழிவோடு அரிக்கின்ற வறுமையால், “அன்பு சுரக்கின்ற இல்லம்” என நினைத்து அவன் அடி எடுத்து வைக்கிறான். “ஏன்”டா, தடி கடா மாதிரி இருக்கிறாய்! எங்காவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா?” என்று எக்களிப்பால் கேட்கிறான் எழுபது லட்சத்துக்கு முதலாளி; வேலை கிடைத்தால் அவன் ஏன் உன் வீடு தேடி வருகிறான். அவன் வந்தது அறிவுரை கேட்க அன்று; பரிவுரை; பங்கீடு பெற அன்று; பண உதவி; அதுதான் எதிர்பார்க்கின்றான். கடிந்து பேசுவது மடத்தனம்; படிந்து பரிவு காட்டுதல் பெருந்தனம்; மதியாதார் வாசல் மிதிப்பது மிகவும் வேதனைக்குரிய செயல் ஆகும். இடன் அறிந்து கேட்க வேண்டும். வந்த பிறகு கடன் அறிந்து உதவ வேண்டும். இதுவே மனித இயல்; பண்பாடு; உடன்பாடு; அதற்கப்புறம் அவர்கள் பாடு.

திருமகள் செல்வச் செருக்கு உடையவள். அவள் எந்த இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாள்; அறிவாளி, உழைப்பாளி; சேர்ப்பாளி. இவர்களிடம்தான் தங்கிக் கலகலப்பாள்; சோர்வு இருந்தால், சோம்பல் காட்டினால் அவள் சொகுசாக அவனை விட்டு நீங்கிவிடுவாள். பணத்தை வைத்துக் காப்பாற்ற முயலவேண்டும். பொருள் கைவிட்டுச் சென்றபின் கையறவு பாடினால்