பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


பயன் இல்லை. அவன் என்னவோ திட்டமிட்டே செலவு செய்தான். கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினான். தெய்வம் கை கொடுக்கவில்லை. அது இவனைக் கைவிட்டுவிட்டது. இந்த இரண்டு காரணங்களால்தான் வறுமை வரவேற்புச் செய்கிறது. விரும்பியா ஒருவன் இரக்க வருகிறான். இரக்கமற்றவர் அதனை எண்ணிப்பாரார். எந்த நிலையிலும் பிறர் கையேந்தி வாழாமையே மேன்மைக்கு வழியாகும். ஊக்கம் அதனைக் கைவிடக்கூடாது; வறுமைக்குத் தாக்குப் பிடிப்பது வளர்ச்சியைத் தரும்.

கேட்டால் மறுக்கமாட்டார்கள்; கேட்டு இல்லை என்று சொன்னது இல்லை. திண்ணிய அன்பினர்; கண்ணியம் மிக்கவர் என்றாலும் பூவைக் கசக்கி முகர்ந்தால் பூவும் தன் மணம் கெடும். அதனை விலகி இருந்தே ரசிக்க வேண்டும். வேறு வழியில்லை; அவர்களை அணுகித்தான் அவசியத்தை ஈடு செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் உள்ளம் வேதனை அடையாமல் இருப்பது இல்லை. மனம் உருகுகிறது; வேகிறது; வேதனைப்படுகிறது. முன்பின் பழகாத ஒருவனிடம் சென்று துணிந்து கேட்டுப் பெறுவார் நிலை எண்ணிப் பார்க்கவே அச்சமாகிறது. அந்த அப்பாவிகள் எவ்வளவு துன்பப்படுவார்கள்; எண்ணிப் பார்க்க வேண்டியது. இரத்தல் அச்சம் தருவது; இது கொடியது; வாட்டம் தருவது.

அவசரப்பட்டுப் பிறர் கையேந்தும் நிலைக்குச் சிலர் சென்றுவிடுகின்றனர். கடன் கேட்கத் துணிகின்றனர். நன்கொடை என்று நவில்கின்றனர். பிறரிடம் கை நீட்டிப்