பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



32. அவை அறிந்து பேசுக
(அவை அறிதல்)

அறிவு மிக்கவர் அங்கு ஆய்வு நடத்துகின்றனர். கூட்டம் அது என்று நாட்டம் கொண்டு கண்டவர் நுழைகின்றனர். நுணுக்கமான செய்திகளை அவர்கள் கூரிய அறிவு கொண்டு அலசி விவாதிக்கின்றனர். “முட்டை முதலா? கோழி முதலா?” என்று தேவையற்ற கேள்வியைக் கேட்டு அதற்கு ஒரு பக்கம் நின்று வாதாடுகின்றான். இதைப் பற்றி யாருமே முடிவு கண்டதில்லை. வீண் தருக்கம் அடுத்த கேள்வி “பெண் தொடக்கமா? ஆண் ஆரம்பாமா?” இவை நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை; “கடவுள் எப்பொழுது தோன்றினார்?” இது குறுக்குக் கேள்வி. அவையில் கூடிய புலவர்கள் நவையற்ற செய்திகளைப் பேசுகிறார்கள். இவர்கள் கவைக்கு உதவாதவற்றைப் பேசி அவலத்தை உண்டாக்குகிறார்கள். கூட்டம் கலவரத்தில் முடிகிறது. அவைக்கண் கற்றோர் தேவையற்றவரை அனுமதிப்பது அமைதியைக் கெடுக்கும். அசதியை உண்டாக்கும் பெரிய விஷயங்களைச் சிறியவர் முன் பேசுதல் கூடாது.

கூட்டம் இருவகைப்படும். ஒன்று சிறப்புக் கூட்டம்; மற்றொன்று பொதுக் கூட்டம். எதிலும் சில வரைமுறைகள் உண்டு; தலைவர், பேச்சாளர் என்ற பாகுபாடு உண்டு. நன்றி நவில நல்லவர் ஒருவர் நாலு