பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

145


வார்த்தை பேசி முடிப்பர். தலைவர் முன்னுரை பேசி முடிவுரை தருவர். பேச்சாளர் அவர் தான் தலைப்பை ஒட்டித் தலையைச் சுற்ற வைப்பார்; அவையில் அமர்வோர் அடக்கமாக அமர்ந்து சொல்வன கேட்டு அறிய முற்படவேண்டும். புரியாமல் இருந்தால் வெளியே செல்வது கண்ணியம்; அயராது அசையாது அமர்வது நாகரிகம்; வாயைத் திறக்காமல் இருப்பது அவை அறிந்து செயல்படுவது ஆகும்.

பள்ளியிலேயும் பட்டி மண்டபங்களிலேயும் சிலர் செய்யுட்களை மனப்பாடம் செய்து கடல் மடை திறந்ததுபோலக் கனத்த சொற்களில் அடித்துப் பேசுவர். கம்பனைக் கரைத்துக் குடித்துவிட்டவர்போல் இரைத்துப் பேசுவர். இவர்களைக் கல்விக் கடல் என மதித்துக் கரகோஷம் செய்து ஆரவாரித்துப் பாராட்டுவர்.

பட்டிமன்றத்துக்கு என்றே சில படைகள் திரண்டு எங்கும் வெட்டிப் பேச்சு பேசுவதையே புலமை என்று காட்டி வருகின்றனர். இவர்களில் பலர் பதிவுத் தட்டுகள், ஆழ்ந்த புலமை உடையவர் என்று கூற முடியாது. ஆனால் சொல் விற்பன்னர்; சுகமாய்ப் பேசுவர். அதற்கு இப்பொழுது கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. அறிவுக்கு விருந்தாகின்றது. வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றே கூற வேண்டும்.

கல்வி கற்றவர் ஆறி அடங்கி ஒரு சில சொற்களே பேசுவர்; ஓசை எழுப்பி மக்களை மகிழ்விக்கத் தெரியாதவர்கள் இவர்கள்; இவர்களே சான்றோர் என மதிக்கப்படுவர். இவர்கள் பேசக் கூட்டம் கூடாது. நாட்டமும் செலுத்தார். ஆரவாரம் மிக்கது இந்த உலகம்;

10