பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



33. அறிவு குறைந்தவர் அவதி
(புல்லறிவாண்மை)

நூல் பல கற்கிறாய்; நுண்ணறிவு பெறுகிறாய் என்று கூற முடியாது. நூல் ஒரு பாற்கடல்; அதனைக் கடைந்து எடுக்கும் அமுதம் அறிஞர்களின் அனுபவ மொழிகள். அருள் அறமும் மனிதநேயமும் மாண்பும் உடையவர்கள் சிந்தித்துக் கூறும் சிந்தனைகள். அவர்கள் வாயில் வரும் சில சொற்கள் அவை திருக்குறள் போன்றவை. அரிய கருத்துக்கள்; இவற்றை நல்லறிவுடையவர் கேட்டு அறிந்து பயன்படுவர். அறிவு குறைந்தவர் அவை செறிவு மிக்கன என்பதால் அவற்றை வாங்கும் ஆற்றல் அற்று அவை தமக்கு ஏலா என்று புறக்கணிப்பர். அமுத மொழிகளை அறிவதை விட்டுக் குமுத ஏடுகளைப் புரட்டிக் கொண்டு, “இப்படத்தில் எத்தனை சன்னல்கள் இருக்கின்றன?” என்ற கேள்விக்கு விடை கண்டு கொண்டு இருப்பர். இன்று வினா விடைகள் நடிகையின் நயனங்களைப் பற்றியும் நளினங்களைப் பற்றியுமே அமைகின்றன. அறிவு குறைந்த சாமானியர்களைக் கவர அவர்கள் எடுத்தாளும் உத்திகள் இவை. இதில் பங்கு கொள்பவர் நிறை அறிவுடையவர் அல்லர்.

அறிவு குறைந்தவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனைகளில் பிடிப்பு ஏற்பட வாய்ப்புக் கிடையாது. அறிஞர்களிடம் பழகுவார்கள். ஆனால் அவ்வறிவில் நாட்டம் காட்ட