பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


மாக்கள் இவர்கள். எக்கேடு கெட்டால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? வாக்குரிமை பெற்று விட்டுச் சாவடிக்கு நடக்கத் தயங்கும் சோம்பேறிகள் இவர்களுக்குக் குடி உரிமை வழங்குவது தேவை இல்லை; அதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள்.

தாடி வளர்த்துவிட்டான்; கேட்டால் “நாடி தளர்ந்துவிட்டது” என்கிறான். வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டால் இவன் கத்தி அடக்குகிறான். குப்பை கிழித்துப் போட்டால் சுத்தம் சோறு போடும் என்கிறான். சிரித்துப் பேசினால் சீரழிந்து போவாய் என்கிறான். புகையிலை விரித்தால் போச்சு பெண் சிரித்தால் போச்சு என்று கட்டுப்படுத்துகிறான். விடுமுறைவிட்டால் கூடப் பாடம் படி என்று பையனை வற்புறுத்துகிறான். சிரிக்கவே அந்த வீட்டில் இடம் இல்லை. முகத்தை மூஞ்செலியாக்கி வைத்துக் கொள்கிறான். கேட்டால், “வம்பு தும்புக்குப் போகமாட்டேன். நான் உண்டு; என் வேலை உண்டு; பெண்டு உண்டு; பிள்ளை உண்டு; அவர்கள் எனக்குக் கற்கண்டு; வேறு எதையும் நான் கண்டு கொள்வதில்லை” என்கிறான். ஓட்டைக் கார் அதை ஓராயிரம் முறை துடைத்துக் கொண்டு இருக்கிறான். நாலு சுவர் அதன் நடுவில் இவன் நாயகன். தனிமனிதன் சே! கொஞ்சம் சிரிக்க மாட்டான்; விடு அவனை; வேறு பேச்சைத் தொடு.

வாலிபமுறுக்கு; பணச் செறுக்கு; அதிகாரம் எல்லாம் இருக்கு; இப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிக்க முடியும். ஆனால் நினைப்பது யாது? செய்யத் தக்கது யாது? இன்று பொது வாழ்வில் எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. ஆட்சியாளரை நம்பி அங்குமிங்கும் பொருள் திரட்டிச் சில நன்மைகள் கருதித்