பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

153


திரட்டிய நிதி; அஃது அதோகதி; படித்தவன் அதற்குப் பிறகு முடித்த பிறகு, “ஏன் படித்தாய் மகனே! இருந்த பணம் இருந்திருந்தால் விருந்துடன் நன்றாகச் சாப்பிடலாமே” என்று வருந்தும் இளைஞர் ஏராளம்; பெண்ணைப் பெற்று வளர்த்து அவளைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல காசு குறைவாகக் கேட்பவனுக்குக் கட்டிக் கொடுத்துவிட்டு அவள் கட்டுக் கழுத்தியாக வீடு வந்து சேர்கிறாள். ‘வாழா வெட்டி’ என்று அவள் எட்டி உதைக்கப்படுகிறாள். அவள் வாழ்வு எட்டிக்காய் ஆகிறது. எவ்வளவோ அறங்கள் செய்யலாம். அதற்கு நீ சிந்தை செலுத்து; என்ன செய்வது? பொழுது கழியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறாய் வேலையா இல்லை; வேண்டியது இருக்கிறது. விவரம் அறிந்து செய்துமுடி; இந்த வயதில் நீ நல்லதை நாடாவிட்டால் முதுமையிலா நாடப்போகிறாய்? எட்டி அடி எடுத்து வைக்க நீ தட்டுத் தடுமாறும் காலம்; நீ கட்டியவளும் கருதாள் ஒட்டி உறவாடிய சின்ன வீட்டாளும் சீண்டாள். யாருமே வேண்டார். இளமையில் கல்; வளமையில் அறத்தோடு வாழ்க! உயர்க.

பிடித்து வைத்த பிள்ளையார் என்று அசையாமல் எதற்கும் இசையாமல் இருக்கும் இந்தப் பிள்ளை யார்? கொட்டாப் புளிபோல இருக்கிறான். கொடுக்காப்புள்ளிக் காய் போல் கரிக்கிறான். எப்பொழுதாவது சிரிக்கிறானா என்றால் சிரிப்பது இல்லை. வசதி இருந்தும் வாழ மறுக்கிறான். அவனாக இன்பம் அடையமாட்டான். சரி இல்லாதவன் அவனுக்குக் கூழுக்கு உப்பு இல்லை என்கிறான்; மகளுக்கு மனம் முடிக்க அதுவே அன்றாடம் அவன் வீட்டுப்பட்டி மன்றப் பேச்சாக