பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


அமைகிறது. அவசரத்துக்கு ரூபாய் ஐந்து என்று கேட்டால் அதை எடுத்துவிட்டால் திருப்பிப்போடுவது எப்படி? அப்படியே போய்விடும் என்று அஞ்சுகிறான். காசு என்றால் வேசியர்கள் கெட்டார்கள் அலைகிறான்.

நல்ல வழிகளில் அவர்கள் நடத்தை இயங்காது. ‘குட்டி’ என்கிறான்; ‘புட்டி’ என்று தேடுகிறான். ‘வட்டி’ என்று அதில் வாழ்கிறான். 'கட்டி' என்று பொன்னைத் திரட்டி வைக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு மட்டியாகச் செயல்படுகிறான். சும்மா இரு சொல்லற என்றால் அது தன்னால் இயலாது’ என்கிறான். ஒயாப் பேச்சு; அவன் விடும் மூச்சு ஆசைத் தீயாக இருக்கிறது. வேலை இருக்காது; ஆனால் வீணாகத் திரிவான்; பொய் சொல்வது அவனுக்குப் பொழுதுபோக்கு. கேட்டால் நான் கவிஞன் என்கிறான். ‘கவிதைக்குப் பொய் அழகு, என்று புதுக் கவிஞன் ஒருவன் பாடிவிட்டான், அதனை இவன் சான்றாகக் காட்டுகிறான் பொய் சொல்வதற்கு.

காசு மிகுந்துவிட்டால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது. பேரன் பேர்த்தி எடுத்துவிட்டான்; பேரமைச்சன் என்ற நிலையையும் எட்டிப் பிடித்தான் என்றாலும் அவன் அடங்கிக் கிடக்கவில்லை. பேரழகியைக் கைப்பிடித்தான். அஃது இந்த நாட்டுப் பெரியவர்கள் விவகாரம். அப்படி வாழ்ந்த முதியவன் ஒருவன் கன்னி ஒருத்தியைக் கைக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று கலியாணமும் செய்து கொண்டான். இது ஓர் இலக்கியச் செய்தி.

அவள் அதிர்ஷ்டக்காரி, மூப்பு வந்து அவனைக் கிடத்திவிடுகிறது. செல்வத்துக்கு எல்லாம் அவள்தான் வாரிசு; அதற்குத் தேவையில்லை யார் சிபாரிசும்.