பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

155


வயித்தியன் சொல்லிவிட்டான். வேண்டியவர்களுக்குச் சொல்லி அனுப்புக என்று. அதற்குப் பொருள் தேவைப் பட்டவர்களை வரச் சொல்லி அனுப்பி வைத்தாள். காணார், கேளார், கால் முடப்பட்டோர் இந்த வரிசைக் காரர்கள் அந்த வீட்டை நோக்கி முற்றுகையிட்டனர். சேர்த்து வைத்த பொன்கட்டி அது வைத்திருந்த கைப் பெட்டி ‘புதுசுவிடம்’ தந்திருந்தான். அவள்பால் ‘மவுசு’ குறைந்தது; “தருமம் செய்தால்தான் அந்தப் புண்ணியம் கூட வரும்” என்று தம்பூராக்காரர்கள் தம்பட்டம் அடுத்துப் பேசியதைக் கேட்டிருந்தான். புண்ணியத்தை ஈட்ட அவன் அந்தப் பொன்னைக் காட்ட அவள் அறிந்து கொண்டாள். “இந்தக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டேன் இளமையை அவனுக்கு அடகு வைத்தேன்.” என்று குமுறுகிறாள்.

அவன் படகு “திசை மாறுகிறது” என்பதை - அறிகிறாள். அவன் பரிபாஷை அவளுக்கு மட்டும்தான் புரிந்தது. மற்றவர்கள் அதை அறிய முடியாமல் ஆர்வம் காட்டுகின்றனர். “ஐயா விளாம் பழமா கேட்கின்றீர்; அஃது உடம்புக்கு ஆகாதே” என்று அன்புடையாளைப் போலப் பேசி அவன் பேச்சை மாற்றுகிறாள். அவர் மறுபடியும் கையை உருட்டுகிறார்; அவள் “கடலை உருண்டையா? அஃது உடலுக்கு ஆகாதே” என்கிறாள். அவர் “எள்ளுருண்டை” என்று எரிச்சலோடு சொல்லி வினவுகிறார். “இது நள்ளிரவு; எங்கே போவது?” என்று மழுப்புகிறாள். இழுப்பு வருகிறது; திரை மூடப்படுகிறது. அவனால் நினைத்ததை முடிக்கவில்லை. வாலிப வயதில் வாய்தா கேட்காமல் எந்த நல்ல காரியத்தையும் செய்து முடிப்பதுதான் அறிவு; அதுவே வாழ்க்கையின் விரிவு.