பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



34. “செம்மாக்கும் கீழ்”
(பேதைமை)

கரை ஏறக் கருதாது கறைபடிந்த வாழ்வில் நிறைவு காண்கிறாய்; ‘கதகதப்பும்’ ‘மிதமிதப்பும்’ சூடு பிடிக்கின்றன. இன்ப வாழ்வில் நீந்தி விளையாடுகின்றாய்; அலைகள் எழுச்சியும் வீழ்ச்சியும் தருகின்றன. இன்பம் ஒரு மயக்கம்; அவை நிலைக்கும் என்பது அறியாமை; ஆமையை வெந்நீரில் போடுகிறார்கள்; குளிப்பாட்ட அன்று; மகிழ்வூட்ட அன்று. அது செந்நீரில் வெந்து சாக. அந்த நீர் மிதமான சூட்டில் இதமான இன்பம் அனுபவிக்கிறது அந்த ஆமை, வெதவெதப்பு அதற்கு மிதமிதப்புத் தருகிறது. இன்பம் நிலைத்தது என்று இறும்பூது அடைகிறது. அய்யோ பாவம்; சூடு மிகுகிறது; துடிக்கிறது; உயிர் வெடிக்கிறது. தன்னை இழக்கிறது, அழிவு பெற்றுவிட்டது. இதுபோல உன்நிலைமை ஆகக்கூடாது. பதமாக இருக்கும் போதே ஒருவிதமாகக் கரை ஏறுக. கறை மாறுக; விடுதலை பெறுக இன்பக் கேளிக்கைகளில் ஆழ்ந்து அழிந்து போகாதே.

கடமைகள் காத்துக் கிடக்கின்றன. உடமைகளை இப்பொழுது விடமுடியாது. பெரியவனுக்கு மணம் முடித்தேன்; மகளுக்கு மாப்பிள்ளை; பேரனுக்கு புதுப்பள்ளி; வீடுகட்டியாக வேண்டும் எல்லாம் அரை குறையாக இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியவை பாக்கிகள் நிறைய இருக்கு. எப்படி இதனை விட்டுவிட