பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

157


முடியும்? பந்த பாசங்கள் வாழ்க்கையின் நேசங்கள். அறம் துறவு கருணை அருள் இவை எல்லாம் தள்ளிப் போடுகிறான். “என் தாய்க்கு நான் கொள்ளிப் போடவேண்டி இருக்கிறது” என்று சாக்குப் போக்குக் கூறுகிறான். இவன் செய்கை எப்படி இருக்கிறது?

கடலிலே ஒருவன் முழுகி நீராடச் சென்றானாம். “அலைகள் ஓயவில்லை; அலைகள் அடங்கட்டும், நீரில் இறங்குகிறேன்” என்றானாம். அலையும் ஓயப்போவது இல்லை. இவன் நீரில் இறங்கப் போவதும் இல்லை. இல்லில் அகப்பட்டுக் குடும்பச் சுமையை விடமுடியாது. கடமைகளும் தீராது. இவன் அறவாழ்வில் அடிஎடுத்து வைக்க முடியாது. இவர்கள் எல்லாம் சமுசார பந்தத்தினின்று விடுபட முடியாது.

“உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவு இலார்” என்பர் வள்ளுவர். கல்வி நூல் பல கற்றவர்; உயர்குடியில் பிறந்தவர்; தவஒழுக்கம் கொண்டவர். அறிவு முதிர்ச்சி உடையவர் இவ்வளவு இருந்தும் நடைமுறை உலகை அறிந்து வாழ வழி அறியமாட்டார். வீட்டில் மனைவி மக்களோடு போராட்டம். அவர்களை அடக்கி ஆள நினைத்தான். தன் போக்கின்படித்தான் அவர்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். தொழில் துறையில் எல்லாம் தனக்குத்தான் தெரியும் மற்றவர்கள் கற்றுக் குட்டிகள் என்று கூறி அவர்களை அடக்கி வைக்கிறான். பிறர் உரிமைகளை மதிக்க மறுக்கிறான். இவன் வாழ்வு தோல்வியுறுகிறது; மனம் உளைகிறான் களைப்புதான் ஏற்படுகிறது.