பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



அதோ அது யார் வீடு, ‘அமைச்சர் இல்லம்’ என்று அழகு தமிழில் அறிவிக்கின்றனர். அங்கே ஒரே கூட்டம் ஏன்? மனு நீதிச் சோழனிடம் சென்று நீதி கேட்க அன்று; அநீதியை விலைக்கு வாங்க; தவறான வழிகளில் சலுகைகளைப் பெற. நியாயத்துக்கே அங்கு விலை பேசப்படுகிறது. அது நிதித்தலம் என்று பேசிக் கொள்கிறார்கள். போன காரியம் வெற்றியா? இல்லை என்று வெறுங்கை காட்டுகிறார்கள். அங்கே நெருங்கிக் குழுமி இருக்கின்றனர். நல்லதும் அங்கே நடைபெறு வதும் இல்லை கெடுதலும் இல்லை; ஏன் அங்குச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்? அதற்கு விடை நாலடியார் கூறுகிறது. நெய் இருக்கும் பாத்திரம்; மூடி இறுகத்தான் உள்ளது; எதுவும் கிடைக்காது என்றாலும் அதைச் சுற்றி எறும்புகள் ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கின்றன. இந்த எறும்புகள் நிலைதான் அதிகாரமும் பணமும் உடையவர்கள் இல்லமும் அதைச் சுற்றி வரும் கூட்டமும்.

எல்லாம் இருக்கிறது என்றாலும் எதுவும் இல்லாதவனாக வாழ்கிறான். வசதிகள் எது இல்லை? இன்றைய மின் அணு இயந்திரங்கள் எல்லாம் நிறைந்துவிட்டன. அரைக்க, வெளுக்க, துடைக்க, எடுக்க, பிடிக்க இவற்றிற்கு எந்திரங்கள் அல்லது எடுபிடி ஆட்கள். அவர் மனைவி ஊதிவிட்டாள். எடை கூடிக் கொண்டே இருக்கிறது. அவள் நடை அதன் இயக்கமும் தடை. பிள்ளைகள் செல்வம் கொடுத்துச் செழிப்பில் கெட்டுவிடுகிறார்கள். என்று பேசிக்கொள்கிறார்கள். சொன்ன பேச்சுக் கேட்பதில்லை. பணியாட்கள் நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.