பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

161


எங்கும் எதிலும் உண்மை இல்லை; அதைவிட அவனிடமே எந்த நன்மையும் இல்லை. நல்லதே செய்து அறியமாட்டான். நாலு பேர் வாழ வழிவகை செய்யமாட்டான். எச்சில் கையாலும் காக்கையை ஒட்ட மாட்டான். மிச்சம் மீதி எதுவும் பணியாட்களுக்கும் தரமாட்டான். ‘இல்லை’ என்ற சொல்தான் அங்கு எதிரொலிக்கிறது. அவன் மனத்திலும் மகிழ்வு இல்லை; அதற்கு யார் பொறுப்பு? அவனே தான். மற்றவர்களை மகிழ்விக்க நினைக்காதவன் அவன் மட்டும் எப்படி மகிழ்வோடு இருக்க முடியும்? அலுப்புத்தான் அவர்கள் நிலுவையாக நிற்கும்.

விரும்பி உன்னிடம் வருகிறார்கள்; உன் சிறப்புகளைப் பேசிப் பாராட்டுகிறார்கள். நீ நடிகனாக இருந்தால் அவர்கள் ரசிகர்கள்; எழுத்தாளனாக இருந்தால் வாசகர்கள்; ஆசிரியனாக இருந்தால் அவர்கள் மாணவர்கள்; தலைவனாக இருந்தால் அவர்கள் தொண்டர்கள். மதிக்க வந்தவர்கள் அவர்களை அவமதித்து அனுப்பிவிடுகிறாய்; பிறகு நீ தனிமையில் வாடுகிறாய். காரணம் நீ பிறரை மதிக்காமைதான். நீ உண்மையில் மகாமேதாவி என்று கர்வப்படுகிறாய். தலைக்கணம்; அதனால் உனக்குத் தலைவலி ஏற்படுகிறது; தவிர்க்க முடியாது.

தகுதி என்பது உன் மதிப்பீட்டால் வருவது அன்று; மற்றவர்கள் பாராட்டால் பெறுவது. நீ எந்தத் துறையில் இருந்தாலும் உன்னைப் பாராட்டிப் பேச நண்பர்கள் தேவை; ரசிகர்கள் வேண்டும்; விமரிசகர்களும் தேவை. விமரிசனம் கண்டு எதிர்த்து வீரவசனம் பேசுகிறாய்; அதற்குப் பொது வாழ்வில் கால் வைக்கக் கூடாது.

11