பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


‘துரு துரு’ என்று அவரைத் தவறான செயலுக்குத் துண்டுகிறது. இது கேட்பதற்குக் கசப்பாகத்தான் இருக்கிறது. அதனால் இது கயமை எனப்படும்.

தவளை நீரிலேயே கிடக்கிறது; என்றாலும் அதன் சொரித் தன்மை நீங்குவது இல்லை. அழுக்கு அகல்வது இல்லை. நூல் பல கற்றவராயினும் பால் விருப்பு அவர்களை விடுவது இல்லை. பெண்பால் அவர் கண்பார்வை சென்று அவளை வம்புக்கு இழுக்க அது விசாரணைக்குரிய செய்தியாக மாறுகிறது. இதுவும் கசப்பான செய்திதான்; ஆகவே இது கயமை ஆகும்.

“கொடிறு உடைக்கும் கூன் கையர்க்கு அல்லால் படிறு உடையவர் படியமாட்டார். ஈர்ங்கை விதிரார்” “அடித்தால் தான் அம்மியும் நகரும்”, “அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவார்” என்பவை பழமொழிகள். பச்சை மரமானாலும் உளிகொண்டு செதுக்கினால்தான் அது நெகிழ்வு தரும். வன்மை உடையவர் அன்புக்குப் பணியார் அச்சுறுத்துதலுக்கே பணிவார். இஃது அவர்கள் கீழ்மையாகும். கசப்பான செய்தி. அதனால் இது கயமையாகும்.

மலை நலம் நினைப்பான் குறவன்; நிலம் நலம் நினைப்பான் உழவன்; செய்த நல்வினை நினைத்து நன்றி பாராட்டுவர் சான்றோர்; கீழ்மகன் குறைகளையே பேசி இழிவுபடுத்துவான். அவனுக்கு நல்லதே தெரியாது இதுவும் கசப்பான செயல்; கயமையாகும்.

“புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதைவிட உயிர்விடுவது அறம் கூறும் ஆக்கம்” என்பார்