பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


வைரக் கற்களைப் பதித்து ஒரு பூண் செய்து அதற்கு மாட்டினான். அப்பொழுதும் அது யானைபோல் ஆக முடியவில்லை. அதன் கம்பீரம் இதற்கு எப்படி வரும்? இது சகதியைத் தேடிக்கீழ்மையில் வாழ்கிறது; மட்டமான மனிதர்களை எவ்வளவு கூர்மைப்படுத்தினாலும் அவர்கள் தம் திட்டங்களில் இருந்து மாறுவது இல்லை. தம் இட்டமான செயல்களையே செய்து சீர் அழிவர்; பேர் கெடுவர். ஊரார் இகழ்வர். இவர்கள் வாழ்வு கசப்புமிக்கது. கயமை உடையது ஆகிறது.

தாமரை இலை நீருக்குள்ளும் அமிழாது, தன் எல்லைக்கு மேலும் நீளாது. ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என்பது பழைய பாட்டு; இந்தத் தாமரை ஒரு நிலையில் நிற்காது. தளர்ந்து கொண்டே இருக்கும். தண்டு ஊன்றி நிலைபெறவும் செய்யாது. அப்படியே அழிந்துபோக வேண்டியதுதான். ஒரு சிலர் இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை நடத்துவர். “இப்படிச் செய்தால் லட்சங்கள் வரும்; அப்படிச் செய்தால் லட்சியங்கள் நிறைவேறும்” என்பர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே கோட்டை கட்டுவர். ஒரு சிறு துரும்புகூட எடுத்துப் போடமாட்டார்கள். இதைப் போலவே காலமெல்லாம் பேசிக்கொண்டு எந்த அளவும் உயரமாட்டார்கள். உள்ள நிலையிலேயே இருந்து தேய்ந்துவிடுவர். கசப்புமிக்க வாழ்வு; பிறரை ஏமாற்றிக் கொண்டே காலம் ஓட்டுவர். லட்சங்கள் வரும் என்று சொல்லிக்கொண்டே தாம் பிறர் மதிக்க வாழ்வர். இவர்களும் கயவர்களே.

நெட்டி இருக்கிறதே அது கெட்டியான பொருள் அன்று. ‘தக்கை’ என்று கூறுவர். அது நீரில்