பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

173


நாள் சிலகூட ஆகவில்லை. ‘மண மேடை’ என்ற விளம்பரத்தைப் புரட்டிக் கொண்டு இருக்கிறான். இவனைப் போல அறிவிலி யாரும் இருக்க மாட்டார்கள். இனிப் பணக்காரி என்று ஒருத்தியைத் தேடுவான்; அவளுக்கு இவன் ‘எடுபிடி’ ஆவான். கடைசிவரை இப்படிப் பட்டவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான். இருப்பார்கள். பெண்டாட்டி இல்லாமல் இவர்கள் வாழமாட்டார்கள். கேட்டால் “ஒன்டிக் கட்டையாக எப்படி வாழ்வது?” என்பார்கள், படட்டும் துயரம். இவர்களைத் திருத்தவே முடியாது. தவம் செய்து அறிவு தேடித் தனித்து இருந்து அமைதியாக வாழ்வது மிக உயர்ந்த வாழ்க்கை. இது தலையாய வாழ்வு. அடுத்தது மனைவி. பின் மக்கள் இந்த வட்டத்துள் அகப்பட்டு உழல்வது. இரண்டாம் தரமான வாழ்க்கை.இதற்கு இல்லறம் என்று பெயர் கொடுத்துச் சிறப்பிக்கின்றனர். மூன்றாவது உழைப்பு இன்றித் தன்மானம் விட்டு யார் பின்னாலாவது சென்று அடிபணிந்து அடிமையாக வாழ்தல்; இது கடைநிலை வாழ்க்கை.

விதை ஒன்று போட்டால் கரை ஒன்று காய்க்காது. இதுவும் இதற்கு நிகரான ஓர் உவமை. மற்றொன்றையும் சொல்லி முடிக்கிறோம். நெல்விதை போட்டால் அதே ரகம்தான். நெல்லூர் அரிசி என்றால் அது வேலூரில் விளையாது. அதுபோல் ‘தந்தை அறிவு மகன் அறிவு’ என்று நாலடியார் கூறுகிறது. எனவே மகன் அறிவாளியாக இருக்க அவன் தந்தையும் ஒரு காரணம் என்பது தெரிகிறது. இது வருணாசிர தருமத்தின் ஒரு பக்கம்; தந்தை சிற்பியாக இருந்தால் மகன் கையில் சிற்றுளி பிடிப்பான்; வித்தியாசம் காலம். சில சில வேறுபாடுகள்