பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



வீட்டுக்குச் சுவர் வைத்தான்; அது வீண் என்று இடிந்து விழுகிறது. இலைகளை வைத்துக் கூரை வேய்ந் தான். அவை வலைகளாகக் கிழிபட்டுச் சிதறிவிட்டன. ஒழுகல் கூரை அழுகல் சுவர்கள்; வழுக்கல் தரை, இதில் எங்கே படுப்பது; எப்படி உடுப்பது சமைப்பது எப்படி? எப்படி நடத்துவது குடித்தனம்; இங்கு இருப் பது மடத்தனம் என்று தன் துரைத் தனத்தைக் காட்டாமல் சாமர்த்தியமாக ஒன்றி வாழ்வது அது மனை வாழ்வு; ஒட்டை சட்டிதான்; கொழுக்கட்டை வேகும் என்று கொழுநனிடம் உரைப்பவளே பழமுதிர்சோலை; மற்றவர்கள் பாலைவனச்சாலை ஆவர்.

மாண்புகள்

அவன் எப்படி அவளைத் தேர்ந்து எடுத்தான்? அவள் தகுதிகள் யாவை? பார்க்க லட்சணமாக இருக்கிறாள்; அவள் கணவனை மகிழ்விக்கவே உடுத்துகிறாள். அச்சம், நாணம் இவை அவளிடம் பிச்சை கேட்டு இடம் பெறுகின்றன; ஊரார் மெச்ச அவள் வாழ்க்கை அமைத்துக் காட்டுகிறாள். வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்ன அவனிடம் வேடிக்கையாகப் பேசுகிறாள்; ஊடலும் கொள்கிறாள்; உப்புக்கரிக்காமல் பின் உபகாரியாக மாறுகிறாள். கொஞ்சிப் பேசி குலவ இடம் அளிக்கிறாள்; காதல் செய்கிறாள். இவள்தான் அவன் தேர்ந்தெடுத்த பெண்; அவள் அன்று மணப்பெண்; இன்று குணப் பெண். வீட்டு மனைவி.

மனைவியின் கூற்று

‘என்றைக்கும் என் கணவர் எனக்குப் புதியவர்தான்; பழகியவர் என்பதால் உடனே குழைந்து