பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

181


அவர் அழைப்புக்கு இழைவது இல்லை. 'வெட்கம்' அது என்னைவிட்டுக் கெடுவது இல்லை. நாணம் அஃது என்னை விட்டு விலகுவது இல்லை. ஐயா இந்தப் பரத்தையர் இவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லை. கண்டவுடன் கருத்து இழப்பர். பொறுத்துப் பழகார். இழுப்புக்கு இழைவார். அவர் அழைப்புக்கு அலைவார். வெட்கக்கேடு இல்லை இவர்களுக்கு மானம் சூடு.

கணவனின் கூற்று

நாணம் மிக்கவள் அவள்; என் நா அவள் நலம் எடுத்துரைக்கிறது. உள்ளத்தில் காதல் உணர்வு உடையவள்; நூல் கற்ற அறிஞர்களின் பேரறிவாக அவள் திகழ்கிறாள். வள்ளல்கள் வாரி இறைக்கும் ஒண்பொருளாக உயர்கிறாள். இன்பத்தை அள்ளித் தருகிறாள். வீரனின் கை வாளாகக் கூர்மைமிக்கவள்; எதையும் திறம்படச் செயலாற்றுகிறாள்.

பாணனும் தலைவியும் உரையாடுதல்

பாணன் ஒருவன் தலைவியை நாடிச் சமாதானம் செய்விக்க வருகிறான். அவன் பாணன்; பண்ணொடு பாடவல்லவன்; இயையாதவரை இயையும்படிச் செய்வது அவன் தொழில். ஊடல் தணிக்க அவன் தூதுவன்; தலைவன் வேண்டுகோளுக்கு தலைவியை இயையும்படிப் பேசி அசைய வைக்க முயல்கிறான். அதற்குத் தலைவி கூறுகிறாள்.

“ஐயா திறமைசாலி, கறுப்புக் கொள்; சிவப்புக் கொள்; அவற்றின் நிற பேதம் பார்க்காமல் இரண்டையும்