பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

183


அதுதான் அந்தப் பரத்தை அவரை தழுவிக் கொண்டு இருக்கிறாள். இதை எப்படி நான் தட்டிக் கேட்காமல் இருக்க இயலும்? பாணனே அவள் தோள் தழுவிய என் கோனைக் ‘கேள்’ என்று எப்படிக் கொள்வேன். இது முறையா? அவரைக் கேள்.

“வண்டு மொய்க்கும் மலரினான்; அவன் என்னைக் கண்டு கொள்வதே இல்லை. அவன் எனக்கு அருளும் என்று கூறுகிறாய். அது வெறும் மருளே. இன்று நான் அவனுக்கு நுனிக் கரும்பு. பரத்தை அடிக் கரும்பு. அவள் அடியை அவன் விரும்புகிறான். அவள் அவன் மடியைப் பிடித்துவிட்டாள். இனி நீ இடை வந்து இணைக்க வந்தால் அமையும் உனக்கே வசை. வெல்க பாண செல்க அவரிடம் சென்று இசை. இவை தலைவி கூற்று.


40. காதல் பாட்டு
(காமத்துப் பால்)

பசலை; அது என் நிறத்தை மாற்றும். என் விசனத்தை எடுத்துக் காட்டும். விளர்த்துவிட்டேன் என்பதைக் கிளர்த்திவிடு. அவர் என்னைத் தழுவுவார்; சிறிது நழுவி விட்டால் உடனே இந்தப் பசலை என்னை இறுகப் பிடித்துக் கொள்ளும். முயங்காத இடத்து இந்தப் பசலை வந்து பாயும். அவரோடு கூடுவது; அதனோடு நிற்பது சுவை தருவது இல்லை. ஊடுவதும் தேவைப்படுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; ஊடல்