பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


இல்லாத கூடல் அதில் நயம் இல்லை. அழகு இல்லை; அறிவுச் சுவை இல்லை. ஊடி விடுகிறேன் அது நீடித்துவிடுகிறது. கூடுவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. வாள்போல் வைகறை வந்து தோள் தோய் காதலரைப் பிரித்துவிடுகிறது.

பொருள் தேடிச் சென்ற காதலர் மழைக்காலம் வரும்முன் விழைந்து வருவதாகச் சொற்கள் இழைத்தார். நாள் ஒற்றி என் விரல்கள் தேய்ந்துவிட்டன. வழி பார்த்து விழிகள் பொலிவிழந்துவிட்டன. எங்கள் மண நாள் முரசு போல வானத்து இடி முழக்கம் கேட்கிறது. மழை வருகிறது என்பதால் ஊரவர் மகிழ்கின்றனர். நான் மட்டும் ஏன் மகிழ முடியவில்லை. மழை நீர் என் கண்ணீராக மாறுகிறது. பிரிவு அரிது; சாப்பறை போல அது எனக்கு விளங்குகிறது. நெய்தல் பறை இரக்க உணர்வைக் கிளறுகிறுது. அதுபோல இந்த மழை பெய்தல். என் அழுகைக் குரலை அதிகப்படுத்துகிறது. காரோ வந்தது; அவர் தேரோ வரவில்லை; யாரோ என் துயர் அவருக்கு அறிவிப்பர்?

கம்மியத் தொழில் செய்யும் கருமகன்கள் தம் கருவிகளை ஒடுக்கிக் கட்டி வைத்துவிட்டனர். உலைக்களத் தீ அணைந்து விட்டது. அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்ள வீடு திரும்புகின்றனர். மாலைப் பொழுது பூமாலை தொடுக்கிறாள் தலைவி, மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறாள். பொன்மாலைப் பொழுதாகக் கழியவேண்டிய அது புன்மாலையாகி விட்டது. தன் துணைவர் அவளோடு இல்லை. இணையில்லாத இன்ப வாழ்வு அவளை விட்டு இரிந்துவிட்டது. கனவுகள் முறிந்துவிட்டன. இன்பப் பொழுது சரிந்து