பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல்

கயல் ஒத்தன அவள் கண்கள்; அவற்றைக் கயல் மீன் என்று கருதிச் சிரல் பறவை அவற்றைக் கொத்திக் கவர அருகில் தத்திச் செல்கின்றன. அந்தோ! அங்கே வில்லின் வளைவை அவள் புருவத்தில் காண்கிறது அப்பறவை. களம் கண்ட வீரன் உளம் அஞ்சிப் பின் வாங்குகிறான். அதுபோல் இந்தச் சிரல் பறவையாகிய மீன்கொத்தி அஞ்சிப் பின் வாங்குகிறது. அவள் விழிகள் கயல்மீன்கள் என்றால் புருவங்கள் வில்லின் வளைவு.

தலைவன் பின் சென்ற தலைவி குறித்துத் தாய் வருந்துதல்

அரக்குப் போன்று சிவந்த ஆம்பல் இதழ்கள் உடையவள்; பருக்கைக் கற்களை உடைய தெருக்களில் அவள் எப்படித்தான் நடந்தாளோ? இதற்கு முன் காலுக்குச் சிவப்பு ஊட்டச் செம்பஞ்சுக் குழம்பு பூச அவள் ‘பைய பைய’ என்று வருந்திக் கூறுவாள். பஞ்சு கொண்டு மெல்ல பூசினும் அஞ்சும் அவள் மெல்லடிகள். அந்தப் பரற்காட்டை எப்படித்தான் கடந்து செல்கின்றனவோ! தலைவன் உடன் போவதில் காடும் அவளுக்குக் கரடுமுரடு என்று படவில்லை. அது வியப்புதான்.

தலைவியின் பிரிவுத் துயர்

ஓலைக் கணக்கர் அவர்களும் தம் பணிகளை முடித்து வைத்துவிட்டு, மாலைப் பொழுதில் ஓய்வு கொள்கின்றனர். அத்தகைய புன் மாலைப் பொழுதில் வானத்தைப் பார்க்கிறாள். சிவந்த வானம் அதுவும் கருகப் போகிறு. அந்நேரத்தில் தன்னை மணந்தவன்