பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

187


இப்பொழுது தணந்து தன்னை விட்டுப் பொருள் தேடப் புது இடும் தேடிச் சென்று விட்டான். அவன் வருகைக்கு ஏங்கும் இவ்வறியவள் சூடிய மாலையை அறுத்து எறிந்துவிட்டு அழுகிறாள். முலை வனப்பு? அதன்மீது பூசிய சாந்தத்தை ஏசியவளாய்க் கலைத்து மனம் குலைகிறாள். மாலை வருவார் என்று வழி பார்த்தாள். பூப் புனைந்தாள், பூசிய சந்தனம் பூவைக்கு வெறுப்பைத் தந்தது. அலங்கரித்துக் கொண்டிருந்த அவள் கலங்கியவளாய்க் கலுழ்கின்றாள்.

தோழியுடன் தலைவி உரையாடல்

“காளை ஒருவன் வழி நடத்த நாளை அவன் பின் எப்படி நடப்பாய் என்று வினவுகின்றாய்! குதிரை ஒருவன் பெறுகிறான்; முன்பின் ஏறியது இல்லை. அதற்காக அந்தக் குதிரையை அவன் அவிழ்த்தா விட்டு விடுவான். அதில் ஏறிச் செல்ல அவன் தானாகக் கற்றுக் கொள்கிறான். ‘ஏய் எப்படி முடிந்தது’ என்றா அவனைக் கேட்டுக் கொண்டிருப்பர். அப்பொழுதே வரும் வேகம்; அதற்கு ஏற்ற விவேகத்துடன்” என்கிறாள் தலைவி.

பிரிந்த பின் தாய் மகள் செயலை எண்ணிப் பார்த்தாள்

“நேற்று என்னை வந்து என் மகள் மார்போடு கட்டி அணைத்து எனக்கு முத்தமிட்டாள்; புல்லினாள்; தழுவினாள்; விம்மினாள்; எனக்கு வியப்பு ஏற்பட்டது; அதற்கு அப்பொழுது அறிகுறி யாது என்பதை அறியேன். என்ன! இவள் திடீர் என்று சிறு குழந்தையாகிவிட்டாளே என்று வியந்தேன். முகத்தில் அவள் வியர்வை முத்து எனத் தெரிந்தது. அவள் என்னைச்