பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


சேர்த்து அணைத்துக் கொண்டது ஏன்? காளை அவனோடு மறு நாளை அவள் செல்லத் துணிந்தது அறியேன். வேங்கை கண்டு வேகமாக ஓடும் மான் கூட்டம் நிறைந்த காட்டுவழியே அவள் செல்லத் துணிந்துவிட்டாள் என்பதை இப்பொழுதே கேட்டு அறிகிறேன். அவன் வேட்டது அது; அதற்கு அவள் காட்டியது அது.

பிரிந்த தலைவியின் கூற்று

“கண்மூன்று உடையவன் சிவன். அவன் பார்வைக்கு எப்படி இந்தக் காமன் தப்பிப் பிழைத்தான்? அவன் எரிபட்டு இருந்தால் என்னை வெறிகொள்ளச் செய்யமாட்டான். இந்த அரவு இந்த இரவு ஏன் இந்த நிலவை விழுங்காமல் விட்டு வைத்திருக்கிறது. அரவே நீ எனக்குப் பகையாகின்றாய்! இந்தக் காக்கை அதற்கு என்ன கேடு? பொழுது விடிவதற்கு அது வந்து ஏன் கரையாமல் இருக்கிறது? இந்த இரவு நீள்கிறது. அதனை மாளச் செய்வதற்கு ஏன் இன்னும் இந்தக் காக்கை எழவில்லை; என் அன்னை எனக்குக் காவல். அவள் அடக்குகிறாள் என் ஆவல். என் தலைவன் வர இயலாமைக்கு அவள் ஒரு தடை இல்லாவிட்டால் நான் எழுந்து நடப்பேன் நடை எனக்கு அவள் முடை” என்கிறாள் தலைவி.