பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

215



செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி. 154

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து. 155

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து. 156

கள்ளார்,கள்ளுண்ணார், கடிவ கடிந்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்,-தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர். 157

பிறர்மறை யின்கட் செவிடாய்த திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த் தீய புறங்கூற்றின்
முகையாய் நிற்பானேல், யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 158

பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப;-என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. 159