பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

217



நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழற் போல
விளியுஞ் சிறியவர் கேண்மை;-விளிவின்றி
அல்கு நிழற்போல் அகன்றகன் றோடுமே
தொல்புக ழாளர் தொடர்பு 166

மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா-துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு 167

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்;-பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும். 168

கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்;-ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண். 169

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்;-தெரியுங்கால்;
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின் 170

18. நல்லினம் சேர்தல்


அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பணிப் பற்றுவிட் டாங்கு 171