பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

219



கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம். 178

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்;-கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும். 179

மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர்;-புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால். 180

19. பெருமை


ஈத லிசையா திளமைசே ணீங்குதலால்
காத லவருங் கருத்தல்லர்;-காதலித்து
ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள். 181

இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைந்தேம் என்றெண்ணிப்
பொச்சாந் தொழுகுவர் பேதையார்;-அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர். 182

மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைக்குப் படாதேநீர் வாழ்மின்-அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாங் காரணம்
இன்றிப் பலவு முள. 183