பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

223



அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன். 202

அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை
எடுக்கல மென்னார் பெரியோர்;-அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,
தன்காய் பொறுக்கலாக் கொம்பு 203

உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;-நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு. 204

இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல்
என்னும் இலராம் இயல்பினால்-துன்னித்
தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்க ளாகற்பா லார். 205

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போன்ற கிளைஞர்மாட்டு
எக்கலத் தானு மினிது. 206

நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து
வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;-கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனுந்
தமராயார் மாட்டே இனிது. 207