பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

229



முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை
நட்டா னொருவன்கை நீட்டேனேல்-நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க
நெடுமொழி வையம் நக 238

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ;-தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு 239

உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற் கமைந்தபால் நீரளா யற்றே
தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம்
விரிபெடையோ டாடிவிட் டற்று 240

25. அறிவுடைமை


பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா 241

நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்
கணிகல மாவ தடக்கம்-பணிவில் சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமுர்
கோத்திரங் கூறப் படும் 242

எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்;
தன்னாற்றா னாகும் மறுமை; வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர் 243