பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

231



கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒரு நிலையே
முட்டின்றி முன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம் 250

26. அறிவின்மை


நுண்ணுணர் வின்மை வறுமை அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்;-எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ,
கண்ணவாத் தக்க கலம் 251

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்ல லுழப்ப தறிதிரேல்-தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து 252

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன்-மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும் 253

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று 254

புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம்-கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து 255