பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர்-பனையின்மேல்
வற்றிய ஒல கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி 256

பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க் கறத்தாறுரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைநகர்ந்து
சென்றிசையா வாகுஞ் செவிக்கு 257

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு 258

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறுஉம் ஈப்போல், இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாரும், தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு 259

கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ் சுதைத்தலால்-மற்றுமோர்
தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் 260

27. நன்றியில் செல்வம்


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளைவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிவார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று 261