பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



வலவைக ளல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர்-வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருணையால் துய்ப்பவே
மேலாறு பாய விருந்து 268

பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வா
மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து 269

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்;-தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின் 270

28. ஈயாமை


நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;-அட்டது
அடைந்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு 271

எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றஞ் செய்தார் தலைப்படுவர்;-மற்றைப்
பெருஞ்ச்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும்
என்பார் அழிந்தார் பழிகடலத் துள் 272

துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றி கலான்
வைத்துக் கழியும் மடவோனை-வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும் 273