பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

235



கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்ச்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும் 274

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்றுாறல் பார்த் துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 275

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;-தனதாயின்
தானும் அதனை வழங்கான்; பயன்துவ்வான்;
யானும் அதனை அது. 276

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார்-உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்த்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல 277

தனதாகத் தான்கொடான்; தாயத் தவருந்
தமதாய போழ்தே கொடாஅர்;-தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான்
பின்னே அவர்கொடுக்கும் போழ்து 278

இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை-விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ் 279