பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்-காத்தல்
குறைபடில் துன்பம், கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள் 280

29. இன்மை


அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்னுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை 281

நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்;-தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து 282

கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்;-கொல்லைக்
கலாஅற் கிளிகடியுங் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர் 283

உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டா யிரவர் தொகுபவே;-வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில் 284

பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும்;
சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்குருவி
கன்மேற் கழுஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு 285