பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

237



உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளு ரிருந்துமொன் றாற்றாதான்;-உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தின னாதலே நன்று 286

நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;-கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார் 287

இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளுர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று 288

கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே
துப்பரவு சென்றுலந்தக் கால் 289

ஆர்த்த பொறி அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவம்;-நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர் 290

30. மானம்


திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதங் கண்டக் கடைத்தும்-எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே
மான முடையார் மனம் 291