பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

239



நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன்
உலையூதுந் தியேபோல் உள்கனலுங் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம் 298

நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும்
அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லா திருப்பது நாண் 299

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வழ்ந்த துண்ணா திறக்கும்;-இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்,
மானம் மழுங்க வரின் 300

31. இரவச்சம்


நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர் 301

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு 302

இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி-புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்
டல்லான் முகம்புகுதல் ஆற்றுமோ மேல்? 303