பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

241



பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க; கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ 310

32. அவை அறிதல்


மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல் 311

நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்குந்
தீப்புலவற் சேரார் செறிவுடையார்;-தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும் 312

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்;-கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர் 313

கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம்-மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டிவிடும் 314

வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோ-டொன்றி
உரைவித் தகமெழுவார் காண்பவே, கையுள்
கரைவித்துப் போலுந்தம் பல் 315