பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

245



கன்னணி நல்ல கடையாய மாக்களின்;
சொன்னனி தாமுணர வாயினும்-இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்
றுற்றவர்க்குத் தாமுதவ லான் 334

பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண்டேலாதிார் மாட்டும்-கறுவினால்
கோத்தின்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல சுனைத்து 335

தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று 336

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு, புறுஞ்சுற்றும்;-யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர் 337

நல்லவை நாடொறும் எய்தார், அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்;-எல்லாம்
இனியார்தோள் சேரார், இசைப்பட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள் 338

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை-தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு 339