பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



கற்றளவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும் 340

35. கீழ்மை


கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைப்போவாக் கோழிபோல்;-மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும் 341

காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின்-கீழ்தான்
உறங்குவோம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன்று உரைத்து 342

பெருநடைதாம்பெறினும் பெற்றி பிழையா
தொருநடைய ராகுவர் சான்றோர்;-பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ் 343

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்;-பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு. 344

பொற்கலத் துட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும்;-அச்சீர்
பெருமை யுடைத்தாகக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறுபடும் 345