பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை;-வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது 352

கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்
குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்
கெற்றா லியன்றதோ நா. 353

கோடேந் தகலல்குற் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணிர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றையவர் 354

தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளநீரார் மாதோ கயவர்; அளிநீரார்க்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின் 355

மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்தநன்றுள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும் 356

ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; கயவர்க்
கெழுநூறு நன்றிசெய் தொன்றுதி தாயின்
எழுநூறுந் தீதாய் விடும். 357